கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

கிளிநொச்சி – தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீர்ர்களின் தந்தையான திருமலையை சேர்ந்த நல்லையா சிதம்பரநாதன் ஏற்றினார். சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.