தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021 – பிரித்தானியா – ஈகைச்சுடரேற்றல்

தலைவன் கட்டிய பாதையிலே விடுதலை தேடி வீறு நடை போட்டு அடிமை விலங்கு உடைக்க அறத்தின் வழி நின்று அல்லும் பகலும் தமிழ் மண் காக்க விழித்திருந்த அந்தவீர மறவர்கள் எம் மாவீரர்களை அகத்தில் இருத்தி 2021 ஆம் ஆண்டிற்கான தமிழீழ தேசிய மாவீரர் நாளினை வழமைபோல் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் நினைவு நினைவு கூரப்பட்டது.

தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரிக்கான ஆயத்த மணி 12:35 மணித்துளிகளில் ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த நம் மாவீரச்செல்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 12:37 மணித்துளிகளில் துயிலுமில்ல பாடல் ஒலித்த சம நேரத்தில் ஈகைச்சுடரினை மாவீரர்களை நினைவில் நிறுத்தி உன்னதமான ஈகை சுடரினை ஈகைச் சுடரினை 29/04/2009ல் வீரச் சாவாடைந்த கதிரவன் என அழைக்கப்படும் கந்தசாமி ரகுவின் தாயாரும் 27/04/2009ல் வீரச் சாவடைந்த லெப் கேர்ணல் ஜெயந்தி என அழைக்கப்படும் அமுதராணி ரகுவின் மாமியாருமாகிய திருமதி. கமலாவதி கந்தசாமி அவர்கள் ஏற்றி வைத்தார். ஏற்றியதைத் தொடர்ந்து கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் எம் மாவீரச்செல்வங்களுக்காக சுடரேற்ற எக்ஸல் மண்டபம் கண்ணீரில் மூழ்க எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றப்பட்டது.