பிரித்தானிய மாவீரர் நாள் – 2021 ஆரம்ப நிகழ்வுகள்

விடுதலைக்காய் களமாடி விதையான மாவீரர்களை வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள். வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2021 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூரப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தளபதி கேணல் கிட்டு அண்ணா அவர்கள் பிரித்தானியாவில் பணி புரிந்த காலம் தொடக்கம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகதோடு பணி புரிந்தவரும் தமிழின உணர்வாளரான திருமதி ராகினி ராஜகோபால் அவர்கள் பொதுச் சுடரினை எற்றிவைத்தார்கள். பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி பாப்ரா ராஜன் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு பிரித்தானிய பொறுப்பாளர் திரு ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.