“தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் ” வெளியீடு!

“தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் ” லண்டனில் வெளியீடு!
420 பக்கங்களின் 7794 மாவ வீரர்களின் விபரங்களை தாங்கிய பெட்டகம்.

லண்டன் எக்ஸலில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்விலல் தமிழீழ மீட்பு போரில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களது விபரங்கள் அடங்கிய “தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்” எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தமிழீழ மீட்பு போரில் 27.11.1982 முதல் 31.12.1995 வரையிலான காலப்பகுதியில் தம் உயிர்களை தியாகம் செய்த 7794 மாவீரர்களது விபரங்கள் அடங்கிய 420 பக்கங்களைக் கொண்ட பிரமாண்ட புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது.

விடுதலைப்போரின் முதல் மாவீரர் லெப்.சங்கரின் தந்தையார் குறித்த தமிழீழ தேசிய மாவீரர் பெட்டகத்தை வெளியிட்டு வைக்க லெப்டினன் கேணல் புலேந்திரனின் துணைவியார் திருமதி சுபா மற்றும் லெப்டினன் கேணல் குமரப்பாவின் துணைவியார் திருமதி ரஜனி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் சிறப்பு பிரதிகளை கப்டன் வாசு, மேஜர் ஜேம்ஸ், கப்டன் சுந்தரியனின் சகோதரர் சேகர் ருத்திரபதி, மற்றும் லெப்டினன் கேணல் மனோஜின் சகோதரரும் கப்டன் கிரோராஜின் தந்தையாருமான சண்முகசுந்தரம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

குறித்த மாவீரர் பெட்டகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் 20 மாவீரர்களின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் நிழற்படங்கள் மற்றும் தேசியத்தலைவரின்சிந்தனைகள் உள்ளடங்களாக இப்பெட்டகம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.