தமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்

காவிய நாயகர்களை வணக்கம் செய்ய கனத்த இதயத்துடனும் கரையும் கண்களுடனும் கார்முகில் துகள்கள் ஒன்று கூடி ஆர்ப்பரிப்பது போல் உலகப்பரப்பெல்லாம் ஒன்று கூடி அவர்களின் நினைவு சுமந்து சுடர் ஏற்றியிருந்தார்கள்.

எழுச்சி கானங்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின தொடர்ந்து அனைத்துலக தொடர்பகம் அறிக்கை ஒலிவடிவில் ஒலிபரப்பப்பட்டது.

அதனை தொடர்ந்து அனைத்துலக செயலக இணைப்பாளர் திரு மகேஸ்வரன் அவர்களின் உரையை தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பை சேர்ந்த கிறிஷ் சபாபதி அவர்கள் ஆங்கில உரையாற்றினார்.

விடுதலை சுவடுகள் எனும் தலைப்பில் உரை மற்றும் நடனங்களுடன் கூடிய அரங்க நிகழ்வும் இடம்பெற்றது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவீர நாள் உரையினை திரு சிவந்தன் அவர்கள் வழங்கினார்கள்.

மாவீரர் நாளின் சிறப்பு உரைகளாக 1997ஆம் ஆண்டிலிருந்து மிச்சம் மற்றும் மோடன் தொகுதி பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனால்ட் அவர்களின் உரையும் பிரித்தானிய கன்சவேடிவ் கட்சி துணைத் தலைவரான போல் ஸ்கலிலி அவர்களின் உரையும் இடம்பெற்றது

இறுதியாக பிரித்தானிய கொடி கையேந்தலும் தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் மாவீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம் என்ற உறுதிமொழியோடு எமது தாரக மந்திரத்தை உச்சரித்து நிறைவாக “நம்புங்கள் தமிழீழம்” பாடலுடன் நிகழ்வானது நிறைவுபெற்றது.