தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா

காவிய நாயகர்களை வணக்கம் செய்ய கனத்த இதயத்துடனும் கரையும் கண்களுடனும் கார்முகில் துகள்கள் ஒன்று கூடி ஆர்ப்பரிப்பது போல் லண்டன் எக்ஸல் மண்டபத்தில் மக்கள் ஒன்று கூடி அவர்களின் நினைவு சுமந்து சுடர் ஏற்றியிருந்தார்கள்.

மாவீரர்களின் நிகழ்வில், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பை சேர்ந்த செல்வி அஸ்வினி ஆனந்தன் அவர்களின் ஆங்கில உரையை தொடர்ந்துபழமைவாதக்கட்சியின் Sutton cheam வேட்பாளர் Mr Paul Scully, தமிழ் மக்களுக்கான அனைத்து பாராளுமன்ற அமைப்பின் உதவித்தலைவரும் Ilford Northதொழிற்கட்சி வேட்பாளருமான Wes Streeting, East ham பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தொழிற்காட்சியைச் சேர்ந்த Stephen Timms ஆகியோரின் உரையை தொடர்ந்து தொழிற்கட்சியின் நிழல் நிதி அமைச்சின் பொறுப்பான John McDonnell அவருடைய செய்தி ஒளிவடிவாக வழங்கப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் திரு நியூட்டன் அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான உரையாற்றினார். மன்னர் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் திரு சுரேஷ் அவர்கள் மாவீரர் நாள் சிறப்புரையினை வழங்கினார். 1996இல் இருந்து 1998 வரையான மாவீரர்களின் நிழல் படங்கள் அடங்கிய பெட்டக பேழையும் வெளியிடப்பட்டது.

இறுதியாக பிரித்தானிய கொடி கையேந்தலும் தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் மாவீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம் என்ற உறுதிமொழியோடுஎமது தாரக மந்திரத்தை உச்சரித்து நிறைவாக “நம்புங்கள் தமிழீழம்” பாடலுடன் நிகழ்வானது நிறைவுபெற்றது.